செஸ் ஒலிம்பியாட்: இந்தியாவை எதிர்த்து இந்தியா

விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய ஏ அணியும் இந்திய சி அணியும் முதல்முறையாக நேருக்குநேர் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் 44வது செஸ் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். இந்த நிலையில், ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை ஓய்வில்லாமல் செஸ் விளையாடிய வீரர்களுக்கு புத்துணர்வு அளிக்கும்வகையில், நேற்று (ஆகஸ்ட் 4) ஒருநாள் விடுமுறையளிக்கப்பட்டது.

இந்த ஓய்வையொட்டி அவர்கள் மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள புராதன சின்னங்களைப் பார்வையிட்டனர். பிறகு, நேரு உள் விளையாட்டரங்கில் நட்புரீதியாக நடைபெற்ற கால்பந்து போட்டியில் 6 அணிகளாகப் பங்கேற்று விளையாடினர்.
அந்தப் புத்துணர்வுக்குப் பிறகு இன்று (ஆகஸ்ட் 5) செஸ் வீரர்கள் 7வது சுற்றில் களமிறங்கி விளையாடவுள்ளனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் ஓபன் ஏ பிரிவு, இந்தியா சி பிரிவுடன் மோத இருக்கிறது. இதன் ஏ பிரிவில், ஹரிகிருஷ்ணா, விதித் சந்தோஷ், அர்ஜூன் எரிகேசி, நாராயணன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

சி அணியில், சூர்யா சேகர், சேதுராமன், அபிஜித் குப்தா, அபிமன்யு புராணிக், ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்திய ஓபன் பி அணியுடன் கியூபா அணி மோத இருக்கிறது. இதில், குகேஷ், சரின் நிஹால், பிரக்ஞானந்தா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இந்தியா சி அணியுடன் இந்தியா அணி மோதுகிறது.

கொனெரு ஹம்பி, ஹரிகா துரோணோவள்ளி, வைஷாலி, தானியா சச்தேவ் ஆகியோர் பங்கேற்கும் மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி அஜர்பைஜனுடன் மோதுகிறது. கிரீஸ் அணியுடன் மோதும் இந்தியா பி அணியில் வந்திகா அகர்வால், சவுமியா சாமிநாதன், மேரி அன் கோம்ஸ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ஸ்விட்சர்லாந்துடன் மோதும் இந்தியா சி அணியில், ஈஷா கரவாடே, நந்திதா, பிரத்யுஷா போடா, விஷ்வா வஷ்ணவாலே ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இந்த சீசனில் இந்திய வீரர்கள் (இந்திய ஏ அணி – இந்திய சி அணி) முதல்முறையாக நேருக்குநேர் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜெ.பிரகாஷ்

காமன்வெல்த் ஆக்கி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.