கால்பந்துக்கு மாறிய செஸ் ஒலிம்பியாட் வீரர்கள்!

விளையாட்டு

சென்னையில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டி வீரர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 4) ஒருநாள் ஓய்வு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் ரிலாக்ஸாக கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா ஜூலை 28ம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கிவைக்கப்பட்டது. இதற்கு அடுத்த நாள் ஜூலை 29ம் தேதி முதல் மாமல்லபுரத்தில் போட்டிகள் தொடங்கிவைக்கப்பட்டன.

ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற இருக்கும் இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தினமும் மாலை 3:00 மணிக்கு போட்டியில் பங்கேற்று அதிகபட்சம் ஆறு மணி நேரம் வரை விளையாடினர். இந்த நிலையில், ஆறு நாட்களாக அதாவது நேற்று (ஆகஸ்ட் 3)வரை தொடர்ந்து விளையாடிய அவர்கள் சோர்வில் இருப்பதைக் கருத்தில்கொண்டு, அவர்களின் சோர்வைப் போக்கி புத்துணர்வு பெறும் வகையில், இன்று (ஆகஸ்ட் 4) ஒருநாள் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இன்று பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் வீரர்கள் கவனம் செலுத்தினர். குறிப்பாக மாமல்லபுரம் கடற்கரை கோவில், கிருஷ்ண மண்டபம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டனர். அடுத்து, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள வீரர்களுக்கு நட்புரீதியிலான கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டிகளில் 6 அணிகளாக வீரர்கள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கலந்துகொண்ட செஸ் வீரர்கள், நிர்வாகிகள் கால்பந்து திறமையை வெளிப்படுத்தினர். சென்னையின் எப்.சி. அணி சார்பாக நடத்தப்பட்ட இந்த போட்டிகள் வீரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
ஜெ.பிரகாஷ்

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணத்திற்கான அட்டவணை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.