சென்னையில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இரண்டாம் சுற்றில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் வெற்றிபெற்றனர். குறிப்பாக, தமிழக வீரர் கார்த்திகேயன் முரளியும், வீராங்கனை நந்திதாவும் வெற்றிபெற்றனர்.
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய அணி தொடர்ந்து அசத்திவருகிறது. இதில் இன்று (ஜூலை 30) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய ஓபன் அணி சி பிரிவு, மெக்சிகோ அணியுடன் மோதியது. இதில், தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி, மெக்சிகோ வீரர் யூரியோ கெப்போவை 34 வீழ்த்தினார். அவர் 30வது நகர்த்தலின்போது, எதிரணி வீரருக்கு நேரம் முடிந்ததால் வெற்றிபெற்றார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய கார்த்திகேயன், மெக்சிகோ வீரர் யூரியோ கெப்போவை வீழ்த்தினார்.
அதேபோல், செஸ் ஒலிம்பியாட் போட்டி இரண்டாது சுற்றில் இந்திய மகளிர் அணி சி பிரிவில் விளையாடிய தமிழக வீராங்கனை நந்திதா, சிங்கப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றார். 34வது நகர்த்தலில் அவர் சிங்கப்பூர் வீராங்கனையை வீழ்த்தினார். அதே சி பிரிவில் விளையாண்ட இந்திய வீராங்கனை ஈஷா கர்வாடே, சிங்கப்பூர் வீராங்கனையை 34வது நகர்த்தலில் வென்றார்.
ஜெ.பிரகாஷ்