செஸ் ஒலிம்பியாட்: இந்திய வீராங்கனைகள் வெற்றி!

விளையாட்டு

மாமல்லபுரத்தில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட்  போட்டியில் இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து வெற்றி வாகை சூடியிருக்கின்றனர்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின்  இறுதிச்சுற்று இன்று(ஆகஸ்ட் 9) நடைபெற்று வருகிறது. இந்தியாவின் 6 அணிகளும் இன்று பங்கேற்றுள்ளன. இந்தியாவின்  பெண்கள் ஏ அணி பதக்கம் வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தநிலையில் சி அணியானது கஜகஸ்தான் அணியுடன் மோதியது.

alt="Chess Olympiad Indian players win"

அதில் பிரதியுஷா போடா என்ற இந்திய வீராங்கனை வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கி தனது 41-வது நகர்த்தலில் வெற்றிப் பெற்றார்.

இதேபோன்று பி அணியில் விளையாடிய திவ்யா தேஷ்முக், ஸ்லோவேகியா வீராங்கனை ஸ்வெட்லனாவை 41-வது நகர்வில் வீழ்த்தினார். அமெரிக்க வீராங்கனையுடன் மோதிய தமிழக வீராங்கனை வைஷாலி ஆட்டத்தை சமனில் முடித்து இருக்கிறார்.

கலை.ரா

செஸ் ஒலிம்பியாட் : இறுதிச் சுற்றில் அதிர்ச்சி அளித்த மேக்னஸ் கார்ல்சன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *