செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிகளுக்கு வெண்கலப் பதக்கம்!

விளையாட்டு

44வது செஸ் ஒலிம்பியாட்டில் ஓபன் பிரிவில் இந்திய பி அணி வெண்கலப் பதக்கத்தையும், மகளிர் அணியில் இந்திய ஏ அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளன.

சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று (ஆகஸ்ட் 9) நிறைவு பெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஃபிடே அமைப்பின் துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் சிறந்த அணிகளுக்கு, வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டன. இதில், உஸ்பெகிஸ்தான் முதல் இடத்தைத் தக்கவைத்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது. அர்மீனியா அணி, ஸ்பெயினை வீழ்த்தி வெள்ளிப் பதக்கம் வென்றது. ஓபன் பிரிவில் இந்திய பி அணி, ஜெர்மனியை வீழ்த்திய வெண்கலப் பதக்கத்தைத் தனதாக்கியது.

alt="chess olympiad closing ceremony"

மகளிர் பிரிவில் உக்ரைன் மகளிர் அணி தங்கம் வென்றது. ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கத்தையும் இந்திய ஏ அணி வெண்கலத்தையும் வென்றன. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல்முறையாகப் பதக்கம் வென்றுள்ளது.

தனிநபர் பிரிவில் இந்தியாவின் குகேஷ், நிஹல் சரின், இங்கிலாந்தின் டேவிட் ஹவல் ஆகியோர் தங்கத்தைத் தட்டிச் சென்றனர். இந்திய வீரர் அர்ஜுன் வெள்ளிப் பதக்கத்தையும் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

11 ஆட்டங்களில் விளையாடிய குகேஷ், 8ல் வெற்றி பெற்று, இரண்டு ஆட்டங்களை டிரா செய்தார். அவர், ஒரு ஆட்டத்தில் மட்டும் தோல்வியடைந்தார். அதுபோல், நிஹல் சரின் 10 ஆட்டங்களில் விளையாடி 5இல் வெற்றிபெற்றார். 5 ஆட்டங்களை டிரா செய்தார். மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தானியா சச்தேவ், வைஷாலி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.

ஜெ.பிரகாஷ்

செஸ் ஒலிம்பியாட்: மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.