செஸ் ஒலிம்பியாட்: இந்திய மகளிர் பி அணி வெற்றி!

Published On:

| By Prakash

சென்னை செஸ் ஒலிம்பியாட்டின் இன்றைய போட்டியில் களமிறங்கிய இந்திய மகளிர் பி அணியினர் வெற்றிபெற்றுள்ளனர்.

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முன்னதாக இந்திய வீரர்களான அர்ஜுன் எரிகைசி, சாத்வனி ருனாக், கங்குலி சூர்யா சேகர் ஆகியோர் ஆட்டத்தை டிரா செய்தனர்.

இந்த நிலையில் 4வது சுற்றில் இந்திய அணியின் ஓபன் பி பிரிவில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய தமிழக வீர குகேஷ், இத்தாலிய வீரரை வீழ்த்தினார். அவர், 34வது நகர்த்தலில் வெற்றிபெற்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பி பிரிவில் பங்கேற்ற பிரக்ஞானந்தா, இத்தாலியின் லாரன்ஸோவுடனான ஆட்டத்தை டிரா செய்தார்.

அதேநேரத்தில், இந்திய மகளிர் பி அணியில் விளையாடிய வந்திகா அகர்வால், எஸ்டோனியா வீராங்கனை நார்வாவை வீழ்த்தினார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய வந்திகா, 43வது நகர்த்தலில் அவரை வென்றார். அதேபோல், ஜார்ஜியா அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய தமிழக வீராங்கனை நந்திதா, 42வது நகர்த்தலில் அந்த அணி வீராங்கனையான பட்சியாசிவிலியை வென்றார்.
இன்று நடைபெற்ற 4வது சுற்றில், இந்திய மகளிர் பி அணி வெற்றிபெற்றுள்ளது. எஸ்டோனியா அணியை 2.5:1.5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் பி அணி வெற்றிபெற்றது.

ஜெ.பிரகாஷ்

இந்த ஆண்டில் இரு பெரிய மாநாடு: மு.க.ஸ்டாலின் திட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share