செஸ் ஒலிம்பியாட்: இன்று இந்திய வீரர்கள் யாரோடு மோதுகிறார்கள்?

விளையாட்டு

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கோலாகலமாக சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக, 187 நாடுகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் போட்டிகள் தினமும் ஒரு சுற்று வீதம் நடைபெற உள்ளன.

இன்று (ஜூலை 29) நடக்கும் முதல் சுற்றில் இந்தியா ஏ அணி ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. ஏ அணியில் விதித் சந்தோஷ் குஜராத்தி, அர்ஜுன் எரிகைசி, நாராயணன் மற்றும் சசிகிரன் கிருஷ்ணன் ஆகியோர் ஆடுகின்றனர். ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொள்ளும் இந்தியா பி அணியில் குகேஷ், நிஹால் சரின், அதிபன் மற்றும் ரௌனாக் சத்வானி ஆகியோர் ஆடுகின்றனர்.

இந்தியா சி அணியில் அங்கம் வகிக்கும் சேதுராமன், அபிஜித் குப்தா, கார்த்திகேயன் முரளி மற்றும் அபிமன்யூ புரானிக் ஆகியோர் தெற்கு சூடானை எதிர்கொள்ள இருக்கின்றனர். மகளிர் ஏ அணியினர் தஜிகிஸ்தானை எதிர்கொள்கின்றனர். இந்த அணியில் கோனேரு ஹம்பி, வைஷாலி.ஆர், டானியா சச்தேவ், பக்தி குல்கர்னி ஆகிய வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்தியா மகளிர் பி அணி, வேல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் வந்திகா அகர்வால், சௌமியா சுவாமிநாதன், மேரி அன் கம்ஸ் மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகிய நான்கு வீராங்கனைகள் களமிறங்குகின்றனர். இந்தியா மகளிர் சி அணி ஹாங்காங்கை எதிர்கொள்ள இருக்கிறது. இவ்வணியில் ஈஷா கரவடே, பி.வி.நந்திதா, சாஹிதி வர்ஷினி, பிரத்யுஷா பட்டா ஆகிய 4 வீராங்கனைகள் விளையாட இருக்கின்றனர்.

இன்று (ஜூலை 29) மாலை 3 மணிக்குத் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர்.

ஜெ.பிரகாஷ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *