செஸ் பழம்: யார் இந்த மானுவல் ஆரோன்?

விளையாட்டு

44 வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் நிறைவு விழா இன்று ( ஆகஸ்ட் 9 ) நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் செஸ் ஒலிம்பியாட் ஒருங்கிணைப்பு குழுவில் பணியாற்றிய அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு செய்தார்.

அந்த வகையில் இந்தியாவிலேயே முதல் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற மானுவல் ஆரோனுக்கு மாமல்லபுரம் கோவில் சிலையை பரிசாக வழங்கினார் முதல்வர். அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர்.

தற்போது முதுமையில் இருக்கும் ஆரோன், இரு கைகளிலும் இருவர் உதவிக்குப் பிடித்தபடியே மேடையேறினார்.

alt="Chess Fruit Manuel Aaron"

மானுவல் ஆரோன் பற்றி நாம் அறியாத பத்து விஷயங்கள்:

டிசம்பர் 30 , 1935 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தற்போது இவருக்கு 87 வயது ஆகிறது

1960 முதல் 1980 வரை இந்திய சதுரங்கத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்.

1959 மற்றும் 1981 இடைப்பட்ட காலத்தில் ஒன்பது முறை இந்தியாவின் தேசிய சாம்பியனாக இருந்தவர்.

சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் இந்திய சதுரங்க வீரர்.

அலகாபாத் பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

alt="Chess Fruit Manuel Aaron"

சதுரங்க வீரர்கள் அதிகம் உருவாகாத காலகட்டத்தில் சதுரங்கம் விளையாடி இந்தியாவிற்கு சர்வதேச அளவில் மதிப்பை பெற்றுத்தந்தவர்.

இந்தியா முழுவதும் சதுரங்கத்தை பரவ செய்ததில் முக்கிய பங்காற்றியவர்.

1977 ஆம் ஆண்டு தமிழ்நாடு சதுரங்க சங்கத்தின் செயலாளராக இருந்தார்.

alt="Chess Fruit Manuel Aaron"

1997 ஆம் ஆண்டு அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார்.

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்.

செஸ் பழமான மானுவல் ஆரோனின் அனுபவத்தைக் கண்டு அரங்கமே நெகிழ்ந்தது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

செஸ் ஒலிம்பியாட்: நிறைவு விழா மேடையில் உதயநிதி

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.