சிஎஸ்கே போட்டி: டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்!

விளையாட்டு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 21-ஆம் தேதி நடைபெற உள்ள சென்னை, ஹைதராபாத் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

நடப்பு ஐபில் சீசன் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 21-ஆம் தேதி ஹைதராபாத் சன்ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ள கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான ரூ.1,500, ரூ.2000, ரூ.2500 டிக்கெட்டுகள் மட்டும் இன்று முதல் சேப்பாக்கம் மைதானத்தில் விற்கப்பட உள்ளது.

டிக்கெட்டுகள் வாங்குவதற்காக நேற்று இரவு முதல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். காலை 9.30 மணியளவில் டிக்கெட் விற்பனை துவங்க உள்ளது.

சேப்பக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் டிக்கெட்டுகள் விற்பனையில் குளறுபடிகள் நடப்பதாக ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர்.

டிக்கெட்டுகள் விற்பனை முடிந்துவிட்டதாக கூறிய நிலையில் மேட்ச் நடைபெறும் போது கேலரிகள் காலியாக இருந்தது.

இதனால் சென்னை, ஹைதராபாத் போட்டியைக் காண்பதற்காக கூடுதல் கேலரிகள் ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சி, டி, இ மற்றும் கலைஞர் பெவிலியன் ஆகியவற்றிலும் ரசிகர்கள் அமர்ந்து கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செல்வம்

முத்திரைத் தாள் விலை உயர்வு: அறிமுக நிலையிலேயே நாகை மாலி எதிர்ப்பு!

திருப்பதி தேவஸ்தானம்: போலி டிக்கெட்டுகள் விற்பனை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *