குஜராத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி!

விளையாட்டு

குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ப்ளே ஆஃப் சுற்றில் குவாலிஃபயர் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் (இன்று 23)மோதின.

டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் டெவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். ஒற்றை இலக்க ரன்னில் இருந்தபோது கெய்க்வாட் கேட்ச் ஆனார்.

எனினும், அது நோ பால் என அறிவிக்கப்பட்டது. ருதுராஜ் கெய்க்வாட் 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்தபோது மோஹித் பந்துவீச்சில் டேவிட் மில்லரிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

19 வது ஓவரில் ஜடேஜாவுடன் இணைந்த கேப்டன் டோனி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜடேஜா 22 ரன்கள், மொயீன் அலி 9 ரன்கள் எடுக்க , சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் அணி வீரர்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர் சாஹா 11 பந்தில் 12 ரன்கள் எடுத்து வெளியேற அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

தசுன் ஷனகா 17 ரன்னும், டேவிட் மில்லர் 4 ரன்னும் எடுத்து வெளியேற குஜராத் அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. விஜய் சங்கர் – ரஷித் கான் இணை அணியை சரிவிலிருந்து மீட்க போராடியது. விஜய் சங்கர் 10 பந்தில் 14 ரன்கள் எடுக்க, ரஷித் கான் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த குஜராத் அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ருதுராஜ் அரைசதம்: குஜராத் அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

யுபிஎஸ்சி தேர்வு : தமிழகத்திலிருந்து தேர்வானவர்கள் யார் யார்?

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *