ஐபிஎல் மினி ஏலத்தில் முதல் வீரராக நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவை தட்டி தூக்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.
துபாயில் இன்று (டிசம்பர் 19) நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் 10 அணிகளும் சுமார் ரூ.262.95 கோடியுடன் வீரர்களை வாங்க போட்டியிடுகின்றன.
ஏலத்திற்காக ரூ.31.4 கோடியை கையில் வைத்திருக்கும் சென்னை அணி ஆரம்பம் முதலே முக்கிய வீரர்களை எடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் உலகக்கோப்பை நாயகன் டிராவிஸ் ஹெட்டை எடுக்க, ஹைதராபாத் அணியுடன் போட்டி போட்ட சென்னை அணி கடைசி கட்டத்தில் விலகியது.
இந்த நிலையில், உலகக்கோப்பையில் பேட்டிங்கிலும், பெளலிங்கிலும் கலக்கிய நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவை ரூ.1.8 கோடிக்கு வாங்கியுள்ளது சென்னை அணி.
அவருக்கு அடிப்படை விலையாக 50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ஏலத்தில் எடுக்க டெல்லி அணியும் முயற்சித்தாலும் இறுதியில் சென்னை அணி வாங்கியுள்ளது.
Young Lion from the Kiwi Land! 🦁🥳 pic.twitter.com/wvEiZqaOCX
— Chennai Super Kings (@ChennaiIPL) December 19, 2023
தொடர்ந்து இந்திய அணி வீரர் ஷர்துல் தாக்கூரையும் ஹைதராபாத் அணியுடன் போட்டி போட்டு ரூ.4 கோடிக்கு வாங்கியுள்ளது சென்னை அணி. அவருக்கு அடிப்படை விலையாக ரூ. 2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
Yellove is where the heart is! 💛 pic.twitter.com/zt3ICTZK83
— Chennai Super Kings (@ChennaiIPL) December 19, 2023
இதன்மூலம் 2019 முதல் 2021 வரை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடியுள்ள ஷர்துல் தாக்கூர் தற்போது மீண்டும் சென்னை அணிக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
IPL Auction 2024 : முதல் சுற்றில் விலை போகாத ஜாம்பவான்!
தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
IPL2024: சென்னையுடன் போட்டா போட்டி… உலகக்கோப்பை வீரரை தட்டித்தூக்கியது சன்ரைசர்ஸ்!