நடப்பு ஐபிஎல் சீசன் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றில் இடம்பெற போகிறது என்ற எதிர்பார்ப்பு ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏற்கனவே கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்தநிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்காக, சென்னை, ஹைதராபாத், டெல்லி, லக்னோ ஆகிய அணிகள் முட்டி மோதிவருகின்றன.
இதனால் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஆடும் கடைசி லீக் ஆட்டம் என்பதால், ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் காத்திருப்பதாக சிஎஸ்கே தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிஎஸ்கே வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “போட்டி முடிந்ததும் ரசிகர்கள் யாரும் உடனே வெளியேற வேண்டாம். மைதானத்திலேயே காத்திருங்கள். உங்களுக்கு சிறப்பான அறிவிப்பு காத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் போட்டியை கண்டுகளித்து வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!
குளு குளு செய்தி – 10 மாவட்டங்களில் கனமழை மேகங்கள்!