மழை காரணமாக இன்று (மே 3) நடைபெற்ற சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி நிறுத்தப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.
லக்னோ வாஜ்பாய் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற சி.எஸ்.கே. கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இதனால் லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மனன் வோரா (10) மற்றும் கைல் மேயர்ஸ் (14) ஆகியோர் களமிறங்கி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து கரண் சர்மா (9), கேப்டன் க்ருணல் பாண்ட்யா(0), மார்கஸ் ஸ்டாய்னிஸ் (6) ரன்னில் வெளியேற, லக்னோ அணி 44 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
அதன்பிறகு ஜோடி சேர்ந்த நிகோலஸ் பூரண்- ஆயுஷ் பதோனியின் பொறுப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது.
இருவரும் 6 ஆவது விக்கெட்டிற்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில் பூரன் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து கடைசி ஓவரில் கிருஷ்ணப்பா கெளதம் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்த நிலையில் மழை பெய்ய தொடங்கியது.
இதனால் ஆட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டது. அப்போது 19.2 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்திருந்தது லக்னோ அணி.
அங்கு தொடர்ந்து மழை பெய்த நிலையில் ஆட்டம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
லக்னோ அணி தரப்பில் அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 59 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சென்னை அணி தரப்பில் மொயீன் அலி, பதிரானா, தீக்சனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதனையடுத்து ஐபிஎல் தொடரில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் சென்னை – மும்பை இடையிலான ஆட்டம் வரும் 6ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
மனோபாலா மறைவு: நடிகர் விஜய் நேரில் அஞ்சலி!
மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் : கர்நாடகாவில் திருமாவளவன்