அதே நாலு பேரு… திக் திக் கிளைமேக்ஸை நெருங்கும் சாம்பியன்ஸ் டிராபி!

Published On:

| By christopher

champions trophy semi final indvsnz

சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அணியை ஊதித்தள்ளி தென்னாப்பிரிக்கா அணி 4வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. champions trophy semi final indvsnz

பாகிஸ்தானில் தொடரும் மழைக்கு நடுவே சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் ஏ பிரிவில் இந்தியாவும், நியூசிலாந்தும் ஏற்கெனவே அரையுறுதிக்கு தகுதி பெற்றன. எனினும் தங்களது போட்டியில் யார் முதலிடத்தை பிடிப்பார்கள் என்பது இன்று துபாயில் நடைபெற உள்ள போட்டியில் தெரிந்துவிடும்.

குருப் பி பிரிவில் 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் நேற்று (மார்ச் 1) ஏற்கெனவே தொடரில் இருந்து வெளியேறிய இங்கிலாந்து அணியுடன் மோதியது தென்னாப்பிரிக்கா அணி.

இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 38.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி 179 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 29.1 ஓவர்களில் 181 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

எனினும் அரையிறுதியில் எந்த அணி யாருடன் மோதுகிறது என்பதை, இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து போட்டிக்கு பிறகே தெரியவரும்.

கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இந்த நிலையில் தற்போது அதே 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிப்பெற்றன.

உலகக்கோப்பையில் இந்தியா நியூசிலாந்து அணியையும், ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. பைனலில் இந்தியாவை ஆஸ்திரேலியா அணி தோற்கடித்து 6வது முறையாக சாம்பியன் ஆனது.

இந்த நிலையில் தற்போது அரையிறுதியில் யார் யாருடன் மோத போகிறார்கள்? இறுதிப்போட்டியில்ல் சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share