துபாய் மைதானத்தில் இன்று (மார்ச் 4) நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. Champions Trophy India
இன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித் சர்மாவும் சுப்மன் கில்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
29 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித்தும் 8 ரன்களில் சுப்மன்கில்லும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அடுத்து , ஜோடி சேர்ந்த கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய இன்னிங்சை கட்டமைத்தது. இதனால், இந்திய அணி நிதானமாக ரன்கள் சேர்க்க தொடங்கியது.
20 ஓவர்களில் இரு விக்கெட்டுக்கு 100 ரன்களை எட்டியது. ஷ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களில் அவுட்டாகி விட தொடர்ந்து, கோலியுடன் சேர்ந்து நல்ல முறையில் ஆடிக் கொண்டிருந்த அக் ஷார் பட்டேல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அப்போது, இந்தியா 35 ஓவர்களுக்கு 178ரன்களை எடுத்திருந்தது. இதனால், இந்தியா வெற்றி பெறுமா? என்கிற பதற்றம் தொற்றிக் கொண்டது.
அடுத்ததாக, கே.எல். ராகுல் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். 98 பந்துகளில் 84 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி அவுட் ஆனதும், பரபரப்பு அதிகரித்தது.
இந்த சமயத்தில் வெற்றிக்கு 55 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்து, ஹர்திக் பாண்ட்யா , கே.எல்.ராகுலுடன் இணைந்தார். 45 ஓவர்கள் முடிவில் இந்தியா 235ரன்கள் எடுத்திருந்தது.
ஆனாலும், எந்த அழுத்தமும் இல்லாமல் விளையாடிய ராகுல், பாண்ட்யா ஜோடி எளிதாக வெற்றி நோக்கி அணியை கொண்டு சென்றது.
பாண்ட்யா 24 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இறுதியாக இந்தியா 48.1 ஓவரில் 267 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இறுதி ஆட்டத்துக்கும் தகுதி பெற்றது. Champions Trophy India