சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பவுமா தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி இன்று (ஜனவரி 13) அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆண்டு நடந்த ஒருநாள் 50 ஓவர் உலகக்கோப்பையைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறுகிறது.
உலகக்கோப்பை தொடரில் முதல் 8 இடங்களை பெற்ற ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் சாம்பியன் டிராபி தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்த நிலையில் முதல் அணியாக ஆஸ்திரேலியா வாரியம் 15 பேர் கொண்ட அணியை நேற்று அறிவித்தது. தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நீண்ட இடைவெளிக்கு பிறகு வேகப்பந்து வீச்சாளர்களான அன்ரிச் நார்ட்ஜே மற்றும் லுங்கி நிகிடி ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான தென்னாப்பிரிக்க அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), ரியான் ரிக்கிள்டன் (விக்கெட் கீப்பர்), ஏய்டன் மார்க்ரம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டோனி டி ஜோர்ஜி, வான் டெர் டுசென், டேவிட் மில்லர், கேசவ் மகராஜ், மார்கோ ஜேன்சன், லுங்கி நிகிடி, அன்ரிச் நார்ட்ஜே, வியான் முல்டர், தப்ரைஸ் ஷம்சி, ககிசோ ரபாடா.
குரூப் ஏ-யில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை பிப்ரவரி 21ஆம் தேதி சந்திக்கிறது. தொடர்ந்து ஆஸ்திரேலியாவையும், இங்கிலாந்தையும் எதிர்கொள்கிறது.
136 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்பிரிக்கா அணி இதுவரை 1998ஆம் ஆண்டு நடந்த சாம்பியன் டிராபி கோப்பையை மட்டுமே கைப்பற்றியுள்ளது. சர்வதேச அளவில் பலம் வாய்ந்த அந்த அணி அதன்பின்னர் நடந்த ஒரு ஐசிசி தொடரை கூட இதுவரை வென்றதில்லை.
கடந்த ஆண்டு நடந்த டி20 தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற நிலையில், இந்தியா அணியிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து முதல் அணியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்னாப்பிரிக்கா அணி கோப்பையை வென்று தனது 136 ஆண்டுகால ஏக்கத்தை போக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜக முக்கிய நிர்வாகி போக்சோ வழக்கில் கைது!
’பாஜகவின் கருத்துகளை தான் சீமான் பேசுகிறார்’ : தமிழிசை தடாலடி!
முதல்வருக்கு ஆணவமா? : ஆளுநருக்கு தக் ரிப்ளை கொடுத்த துரைமுருகன்