கார்ல்சனின் சர்ச்சைக்குரிய ஜீன்சுக்கு 31. 5 லட்சம்… ஏலம் போன பின்னணி என்ன?

Published On:

| By Kumaresan M

செஸ் விளையாட்டில் முன்னணி வீரரான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன். ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர். கடந்த டிசம்பர் மாதத்தில் நியூயார்க்கில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கு ஜீன்ஸ் அணிந்து வந்த கார்ல்சனுக்கு ஃபிடே அமைப்பு அபராதம் விதித்து, ஜீன்ஸ்சை மாற்றிவிட்டு போட்டியில் கலந்து கொள்ளுமாறு சொன்னது. Carlsen’s jeans auctioned

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார் கார்ல்சன். இது, அப்போது சர்ச்சையாகியிருந்தது.

கார்ல்சன் அணிந்திருந்த அந்த ஜீன்ஸ் இத்தாலிய பிரான்டான Corneliani- யின் தயாரிப்பு ஆகும். இந்த பிராண்டின் ஒரு ஜீன்சின் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இந்த நிலையில், கார்ல்சன் தான் அணிந்து சர்ச்சையான ஜீன்சை அமெரிக்காவை சேர்ந்த பிக் பிரதர்ஸ், பிக் சிஸ்டர்ஸ் என்ற என்.ஜி.ஓ அமைப்புக்கு நிதி உதவி செய்வதற்காக ஏலம் விட முடிவு செய்தார். இபேவில் ஏலம் விடப்பட்டது. கடந்த 10 நாட்கள் ஏலம் நடந்தது. Carlsen’s jeans auctioned

தொடக்க விலையாக 7 அல்லது 8 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இரண்டு மணி நேரத்தில் 12. 3 லட்சத்துக்கு ஏலம் கேட்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் கடும் டிமாண்ட் ஏற்பட்டது.இதன் காரணமாக 36, 100 அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு கார்ல்சனின் ஜீன்ஸ் ஏலம் போனது. இதன், இந்திய மதிப்பு 31. 5 லட்சம் ஆகும். Carlsen’s jeans auctioned

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share