இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் கார் விபத்துக்குள்ளானதால், அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் இருந்து, உத்ரகாண்டின் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள தன் வீட்டுக்கு தனது பிஎம்டபிள்யூ காரில் ரிஷப் பண்ட் சென்று கொண்டிருந்த போது, முஹம்மத்பூர் ஜால் அருகில் உள்ள ரூர்க்கி என்ற இடத்தில் அவர் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
அங்கிருந்த சாலை தடுப்பில் கார் மோதிய நிலையில், தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இன்று (டிசம்பர் 30 ) அதிகாலை 5.30 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் ரிஷப் பண்ட் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி அசோக் குமார் “ரிஷப் பண்ட் கார் ஓட்டும் போது தூங்கி விட்டார். அதனால் தான் கார் அங்கிருந்த சாலை தடுப்பில் மோதி உள்ளது.
தற்போது அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பீலேவின் சத்தியமும், அவரின் கடைசி பதிவும்!
பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம்!