ப்ளேஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா ராஜஸ்தான்?

விளையாட்டு

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியின் 16 வது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இன்று நடைபெறும் 66 வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

நடப்பு சீசனில் இதுவரை 13 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் 8 மற்றும் 6 வது இடத்தில் உள்ளன.

இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளில் எந்த அணி வெற்றி கண்டாலும், அடுத்த அணிகளின் முடிவுகளைப் பொறுத்தே பிளேஆஃப்-க்குள் அடியெடுத்து வைக்க இயலும். ராஜஸ்தான் அணியின் ரன்-ரேட் (+0.140) பஞ்சாப்பை (-0.308) விட நன்றாக இருக்கிறது.
முதலாவது லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க ராஜஸ்தான் அணி முயலும்.

அதேவேளையில், தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்று கனவில் தொடர பஞ்சாப் அணியும் தங்களது முழு பலத்தை வெளிப்படுத்தும். எனவே இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

இரு அணிகளின் உத்தேச வீரர்கள் விவரம்

பஞ்சாப் கிங்ஸ்

ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், சாம் குர்ரான், ஹர்பிரீத் பிரார், ரிஷி தவான், ககிசோ ரபாடா, நாதன் எல்லிஸ், அர்ஷ்தீப் சிங்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), தேவ்தத் பாடிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ஜோ ரூட், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், கே.எம்.ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கொளுத்தும் வெயில் : அரசு துறைகளுக்கு பறந்த உத்தரவு!

மரக்காணம் : உடல்களுக்கு மத்தியில் பாக்கெட் சாராயம் விற்பனை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *