சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 69 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டங்களுடன் லீக் போட்டிகள் நிறைவு பெறுகிறது. இதில் இன்று(மே21)மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான விவ்ரந்த் ஷர்மா 69 (47), மயங்க் அகர்வால் 83 (46) ஆகியோர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
அடுத்து, ஹென்ட்ரி கிளாசின் 18 (13), எய்டன் மார்க்கரம் 13 (7) ஆகியோர் இறுதிக் கட்டத்தில் அதிரடி காட்டினார்கள். இதனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 200/5 ரன்களை குவித்து அசத்தியது.
பின்னர், 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் 12 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இருப்பினும், மற்றொரு வீரரான ரோகித் சர்மா 37 பந்துகளில் 56 ரன்களை குவித்து அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து கேமரூன் கிரீன் ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 100 ரன்களும் 16 பந்துகளில் 25 ரன்களும் என இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடியதால், மும்பை இந்தியன்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 201/2 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 14 போட்டிகளில் 16 புள்ளிகளை பெற்று, -0.044 ரன்ரேட்டுடன் 4ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இன்று இரவு நடைபெறவுள்ள கடைசி லீக் போட்டியில் ஒருவேளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெறும் பட்சத்தில், அந்த அணி 4ஆவது இடத்தை பிடித்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அதே நேரம் தோல்வி அடைந்தால் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மும்பை-பெங்களூரு: ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது யார்?
ஹிப் ஹாப் ஆதியின் வீரன் ட்ரைலர்: ஸ்பெஷல் என்ன?
“பேருந்துகளில் ரூ.2000 நோட்டுகள் வாங்க வேண்டாம்”: போக்குவரத்து கழகம்