உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் அரையிறுதிச் சுற்று ஆடவர் இரட்டையர் பிரிவில் இன்று (ஆகஸ்ட் 27) விளையாடிய இந்திய வீரர்கள் வெண்கல பதக்கத்தை வென்றனர்.
27 ஆவது உலக பேட்மிண்டன் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்று இரட்டையர் பிரிவில் இந்திய பேட்மிண்டன் வீரர்கள் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் ராங்கிரெட்டி ஆகிய இருவரும் மலேசிய பேட்மிண்டன் வீரர்கள் ஆரோன் சீயா மற்றும் சோ வூய் யிக்-ஐ எதிர்கொண்டனர்.
இந்த போட்டியில் இந்திய வீரர்கள் 22-20, 18-21 மற்றும் 16-21 என்ற கணக்கில் மலேசிய வீரர்களிடம் தோற்றதன் மூலம் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளனர்.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இரட்டையர் பிரிவில் இந்தியா பதக்கம் வென்றது இதுவே முதல்முறையாகும்.
மோனிஷா
உலக பேட்மிண்டன்: இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் வெற்றி!