உலக பேட்மிண்டன்: இந்தியாவிற்குப் பதக்கம் உறுதி!

விளையாட்டு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் இரட்டையர் பிரிவில் விளையாடிய இந்திய பேட்மிண்டன் வீரர்கள்,

காலிறுதியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

27ஆவது உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

இன்று (ஆகஸ்ட் 26) நடைபெற்ற காலிறுதி சுற்று ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் ராங்கி ரெட்டி ஆகியோர் ஜப்பான் வீரர்கள் டகுரோ ஹோக்கி மற்றும் யுகோ கோப்யாஷை எதிர்கொண்டனர்.

BWF world badminton championship

இந்த போட்டியில் இந்திய வீரர்கள் சிராக் மற்றும் சாத்விக் 24-22, 15-21 மற்றும் 21-14 என்ற கணக்கில் நடப்பு உலக சாம்பியனான ஜப்பான் வீரர்கள் ஹோக்கி மற்றும் கோப்யாஷை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

காலிறுதியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவிற்கு ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.

மோனிஷா

உலக பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.