2022 ஆம் ஆண்டின் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாடிய இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் வெற்றி பெற்றார்.
27ஆவது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
நேற்று (ஆகஸ்ட் 24) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய பேட்மிண்டன் வீரர் எச்.எஸ். பிரனாய் ஜப்பான் பேட்மிண்டன் வீரர் கென்டோ மொமோட்டாவை எதிர்கொண்டார்.
இரண்டாவது சுற்று ஆட்டத்தில் பிரனாய் 21-17 மற்றும் 21-16 என்ற கணக்கில் மொமோட்டாவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
இரண்டு முறை உலக சாம்பியனான மொமோட்டாவை, பிரனாய் இதற்கு முன்பு 7 முறை போட்டியில் எதிர்கொண்டுள்ளார்.
இருப்பினும் தற்போது 8 ஆவது முறையாக எதிர்கொண்டு முதல் முறையாக வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
இரண்டு இந்திய வீரர்கள் மோதல்
இன்று (ஆகஸ்ட் 25) நடைபெறவுள்ள ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர்கள் பிரனாய் மற்றும் லக்ஷயா சென் ஆகிய இருவரும் நேருக்கு நேர் எதிர்கொள்ளவுள்ளனர்.
இதில் வெற்றி பெரும் ஒரு இந்திய வீரர் மட்டுமே காலிறுதிக்கு முன்னேற முடியும்.
லக்ஷயா சென் பேட்மிண்டன் வீரர்கள் தரவரிசை பட்டியலில் 9 ஆம் நிலை வீரராக உள்ளார்.
இவர் கடந்த உலக பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்றார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
உலக பேட்மிண்டன்: அர்ஜுன், துருவ் வெற்றி!