சுப்மன் கில், கோலி அபாரம்: டிராவை நோக்கி செல்லும் 4வது டெஸ்ட்!
4வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் 289 ரன்கள் எடுத்து 191 ரன்கள் பின்தங்கியுள்ளது இந்தியா.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி மார்ச் 9 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் தொடங்கி இன்று (மார்ச் 11) 3வது நாளாக நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று முதலில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 35 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து புஜாரா களமிறங்கி 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் 4வது விக்கெட்டிற்கு விராட் கோலி களமிறங்கினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் சதம் அடித்து 128 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து ரவிந்திர ஜடேஜா களமிறங்கி விராட் கோலியுடன் விளையாடத் தொடங்கினார். 3வது நாள் இறுதியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்துள்ளது.
அரைசதம் அடித்து 59 ரன்கள் எடுத்து விராட் கோலியும் 16 ரன்கள் எடுத்து ஜடேஜாவும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை விட 191 ரன்கள் பின்தங்கியுள்ளது.
மேலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கு இந்தியா இந்த டெஸ்ட் தொடரை நிச்சயம் வென்றாக வேண்டும்.
மோனிஷா
போராட்டத்தை முடக்க கடலூரில் குவிந்த காவல்துறை: அன்புமணி வருத்தம்
வைகோ வீட்டில் திருமா: பேசப்பட்ட முக்கிய விஷயங்கள்!