இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆலன் பார்டர் ஆகியோரை பெருமைப்படுத்தும் விதமாக, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் 1996ஆம் ஆண்டிலிருந்து பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
அந்த வகையில் கடைசியாக 2022-23ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் தொடரில், 2-1 என வெற்றி பெற்ற இந்தியா கோப்பையை தக்கவைத்துக்கொண்டது.
இந்நிலையில், 2024-25ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்க, வரும் நவம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், இந்தியா மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆதிக்கம் செலுத்திவரும் இந்தியா, இந்த காலகட்டத்தில் நடைபெற்ற 4 தொடர்களிலும் அபார வெற்றி பெற்று கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.
2020-21ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் தொடரில், ரிஷப் பண்ட், சுப்மன் கில், டி நடராஜன் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய இளம்படை கப்பா கோட்டையை தகர்த்து, 2-1 என கோப்பையை வென்றது.
அதேபோல, 2018-19 மற்றும் 2016-17 ஆகிய பார்டர்-கவாஸ்கர் தொடர்களிலும், இந்திய அணியே வெற்றி வாகை சூட்டியது.
கடைசியாக 2014-15ஆம் ஆண்டு நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலேயே, ஆஸ்திரேலிய அணி 2-0 என கோப்பையை வென்றது.
அதை தொடர்ந்து, 10 ஆண்டுகளாக இந்தியாவை எதிர்த்து ஆஸ்திரேலிய அணி பார்டர்-கவாஸ்கர் தொடரில் வெற்றி பெறாத நிலையில், அந்த தோல்வி சரித்திரத்தை இம்முறை மாற்றி அமைக்க வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
2014-15ஆம் ஆண்டு பார்டர்-கவாஸ்கர் தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற ஸ்டீவ் ஸ்மித், “டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது நாங்கள் இரண்டு அணிகள்தான் சிறந்த அணிகளாக இருக்கிறோம். கடந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நாங்கள் விளையாடினோம். அங்கு, அவர்களை (இந்தியாவை) தோற்கடித்தோம்.
அவர்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடிய கடந்த இரண்டு முறை இங்கு சிறப்பாக விளையாடினர். கடந்த 2 முறை, அவர்கள் (இந்தியா) ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டபோதும் மிகச்சிறப்பாக விளையாடினர். இம்முறை வரலாற்றை மாறுவோம் என நம்புகிறோம். நாங்கள் கடைசியாக பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆகிறது” என தெரிவித்துள்ளார்.
இந்த 5 போட்டிகள் கொண்ட 2024-25 பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நவம்பர் 22 அன்று துவங்கவுள்ளது.
பார்டர்-கவாஸ்கர் தொடர் அட்டவணை:
முதல் டெஸ்ட் – பெர்த் – நவம்பர் 22-26
2வது டெஸ்ட் அடிலெய்டு – டிசம்பர் 6-10
3வது டெஸ்ட் – பிரிஸ்பேன் – டிசம்பர் 14-18
4வது டெஸ்ட் – மெல்போர்ன் – டிசம்பர் 26-30
5வது டெஸ்ட் சிட்னி – ஜனவரி 3-7
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: பருமனாக உள்ளவர்கள் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டுமா?
டாப் 10 நியூஸ் : கொடியை அறிமுகம் செய்யும் விஜய் முதல் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு வரை!
பியூட்டி டிப்ஸ்: உடற்பயிற்சி… இந்த விஷயங்களைக் கடைப்பிடிக்க மறந்து விடாதீர்கள்!
கிச்சன் கீர்த்தனா : ஸ்வீட் கார்ன் முளைப்பயறு சாலட்