3வது டெஸ்ட் தொடரில் தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 197 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் அபார வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் 2 அணிகள் மோதிக்கொள்ளும் 3வது டெஸ்ட் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்று (மார்ச் 1) தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் ஆஸ்திரேலியாவின் சுழலில் திணறிய நிலையில் 33.2 ஓவரில் 109 ரன்களின் சுருண்டது.
தொடர்ந்து தன்னுடைய முதல் இன்னிங்ஸின் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா 76.3 ஓவரில் 197 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 88 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் அஷ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலியா அணியின் விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு இந்தியா தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித், சுப்மன் கில் களமிறங்கினர்.
சுப்மன் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரோகித்தும் 12 ரன்களில் வெளியேறினார். 3வது விக்கெட்டிற்கு களமிறங்கிய புஜாரா நிதானமாக நின்று விளையாடி வருகிறார்.
அவரை தொடர்ந்து விராட் கோலி 13 ரன்களிலும், ஜடேஜா 7 ரன்களிலும், ஸ்ரேயர்ஸ் ஐயர் 26 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.
எனினும் ஒருபுறம் அனுபவ வீரரான புஜாராவும், பரத்தும் களத்தில் நிதானமாக விளையாடி வருகின்றனர். 39 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் குவித்து 29 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா விளையாடி வருகிறது.
மோனிஷா
“இடைத்தேர்தலில் பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்”: முதல்வர்