சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாஸிடராக பிரபல நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
ஐபிஎல் தொடர் வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கும் தோனி தன்னுடைய கடைசி ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்.
இதனால் சென்னை அணியின் ஒவ்வொரு செயலும் தற்போது முன்பை விட பலமடங்கு ரசிகர்களால் உற்று கவனிக்கப்படுகிறது.
சமீபத்தில் அந்த அணியின் புதிய டைட்டில் ஸ்பான்சராக எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் நடைபெற்ற புதிய ஜெர்சி அறிமுக விழாவில் தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி உள்ளிட்ட சென்னை வீரர்கள் கலந்து கொண்டு ஜெர்சியை அறிமுகம் செய்தனர்.
இந்த நிலையில் சென்னை அணியின் பிராண்ட் அம்பாஸிடராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதன் மூலம் கத்ரீனா சென்னை அணியின் புதிய முகமாக மாறியிருக்கிறார்.
எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் கத்ரீனா இருப்பதால், சென்னை அணியின் பிராண்ட் அம்பாஸிடராக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் இந்த சீசனில் புதிய டைட்டில் ஸ்பான்சர், புதிய விளம்பர தூதர் என ‘புதுசு கண்ணா புதுசாக’ சென்னை அணி தோனியின் கீழ் களம் காணுகிறது. கோப்பையையும் வெல்லுமா? என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நம்பிக்கை வாக்கெடுப்பு : பெரும்பான்மையை நிரூபித்த நிதிஷ் குமார்
‘வெயிட்டாக’ களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்… இயக்குநர் இவர்தான்!