பார்வையற்றோர் டி20 உலகக்கோப்பை: மீண்டும் சாம்பியன் ஆன இந்தியா

Published On:

| By Prakash

பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மீண்டும் சாம்பியன் ஆகியுள்ளது.

பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டிகள் 1996ஆம் வருடம் முதல் நடைப்பெற்று வருகிறது. உலக பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சில், ஓரளவு மட்டுமே பார்வை உடைய மற்றும் முற்றிலும் கண் பார்வையற்றவர்களுக்காக கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது.

அதன்படி, 2022பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர், இன்றுடன்(டிசம்பர் 17) நிறைவு பெற்றது.

இந்த தொடரில், ஆஸ்திரேலியா, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் இந்திய அணிகள் பங்கேற்றன. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த தொடரில் பங்கேற்கவில்லை.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் அணிகள் மோதின. இதில், முதலில் ஆடிய இந்திய பார்வை மாற்றுத்திறனாளிகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20ஓவரில் 2விக்கெட் இழப்பிற்கு 277ரன்கள் குவித்தது.

blind cricket worldcup india beat bangladesh

இந்திய அணியின் சுனில் ரமேஷ் அதிகபட்சமாக 63பந்துகளில் 136ரன்கள் எடுத்தார். கேப்டன் ஏ.கே.ரெட்டி 50பந்துகளில் 100ரன்கள் எடுத்தார்.

இருவரும் இந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பின்னர் ஆடிய வங்கதேசம் பார்வை மாற்றுத்திறனாளிகள் அணி 20ஓவர் முடிவில் 157ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

இதனால் 2022ஆம் ஆண்டுக்கான பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வங்கதேச அணியை 121ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய பார்வை மாற்றுத்திறனாளிகள் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

இதுவரை நடைபெற்ற 3பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய பார்வை மாற்றுத்திறனாளிகள் அணி வென்று இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்துள்ளது.

முன்னதாக 2012மற்றும் 2017ஆகிய ஆண்டுகளின், பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நெய்மர்: ஏன் தெரியுமா?

வங்கதேச டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இந்தியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel