IPL தொடரில் இருந்து வெளியேறிய பெங்களூரு அணி வீரர்!

Published On:

| By Jegadeesh

ஐபிஎல் போட்டியின் 16 வது சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி ரசிகர்களின் ஆதரவுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே சில வீரர்கள் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.

இந்நிலையில், இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் பெங்களூரு அணியை சேர்ந்த வீரர் ஒருவர் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஜத் பட்டிதார் இம்முறையும் அந்த அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் இடம் பிடிக்காத ரஜத் பட்டிதார் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று (ஏப்ரல் 4 )ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரஜத் பட்டிதார் இந்த தொடரில் இருந்து வெளியேறுகிறார் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,துரதிர்ஷ்டவசமாக காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2023-இல் இருந்து ரஜத் பட்டிதார் வெளியேறுகிறார்.

அவர் மீண்டும் விரைவில் குணமடைந்து களத்திற்கு திரும்ப விரும்புகிறோம். அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறியிருந்தாலும் அவருக்கு பதிலாக மாற்றுவீரரை அறிவிக்க வேண்டாம் என பயிற்சியாளர்களும், நிர்வாகமும் முடிவு செய்துள்ளதாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கல்லூரியில் இருந்து விலகிய மாணவி: நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

நம்பர் 1 தமிழ்நாடு : கொளத்தூரில் மு.க.ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share