Video: ”ரொம்ப தப்புங்க” ஸ்டோக்ஸின் செய்கையால் கொந்தளிக்கும் ரசிகர்கள்!

Published On:

| By Manjula

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் போது, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் செய்த விஷயம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தற்போது 331 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து 2-வது டெஸ்டை வெல்வதற்கு 332 ரன்கள் தேவைப்படுகிறது.

2-வது இன்னிங்ஸினை ஆடி வரும் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. சாக் கிராவ்லி, ரேஹன் அஹமது இருவரும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸ் விளையாடும் போது இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களில் அவுட் ஆனார். டாம் ஹார்ட்லி வீசிய அந்த பந்தினை ஸ்ரேயாஸ் தூக்கியடிக்க முயற்சிக்க, அதை சரியாக கணித்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பின்னால் ஓடிச்சென்று அபாரமாக கேட்ச் பிடித்தார்.

அவரது இந்த முயற்சி கிரிக்கெட் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது. ஆனால் அதே சமயம் கடும் விமர்சனங்களுக்கும் ஸ்டோக்ஸ் உள்ளாகி இருக்கிறார். பந்தை பிடித்த அவர் ரசிகர்களை நோக்கி ஒற்றை விரலை காட்டியது தான் அதற்கு காரணம்.

அதோடு தகாத வார்த்தைகளால் திட்டியும் அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஐசிசி-க்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முந்தைய ஆட்டத்தின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக, இந்திய வீரர் பும்ராவுக்கு ஐசிசி நன்னடத்தை குறைபாட்டுக்கான புள்ளியை சேர்த்தது. இதை சுட்டிக்காட்டி ஸ்டோக்ஸின் மீதும் ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புதுச்சேரி எம்பி வேட்பாளர்: பாஜகவுக்கு ரங்கசாமியின் நிபந்தனை!

மீண்டும் தள்ளிப்போகும் தங்கலான்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel