ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடரின் அட்டவணை இன்று (பிப்ரவரி 22) மாலை 5 மணிக்கு வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வருகின்ற மார்ச் 22-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதன்படி முதல் 15 நாட்களுக்கான ஐபிஎல் போட்டியின் அட்டவணை வெளியாகவிருக்கிறது. அடுத்த அட்டவணை நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் வெளியாகும். ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மே மாதம் 26-ம் தேதி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முதல் போட்டியில் வழக்கம்போல சென்னை அணி களமிறங்குகிறது. எதிர்த்து ஆடுவது யாரென்பது தெரியவில்லை. அநேகமாக குஜராத் அல்லது பெங்களூர் அணி எதிர்த்து ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நடைபெறும் தொடக்க விழாவில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் கோப்பையை எடுத்து வந்து ஒப்படைப்பார். இதையடுத்து தொடக்கவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தொடர்ந்து தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடும். நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் கூட டி2௦ உலகக்கோப்பை தொடரால், ஐபிஎல் தொடரை தள்ளிப்போடும் சூழ்நிலை தற்போது இல்லை.
இதனால் தான் ஐபிஎல் போட்டிகளை முன்னதாகவே நடத்திட பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. எது எப்படி இருந்தாலும் வெளிநாடுகளில் போட்டியை நடத்திட பிசிசிஐ துளியும் விரும்பவில்லை. வீரர்களும் ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் தான் ஆடிட விரும்புகின்றனர். எனவே இந்தாண்டு ஐபிஎல் தொடர் முழுவதுமே இந்தியாவில் தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கலைஞர் நினைவிடம் திறப்பு: அதிமுகவிற்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்
சட்டென சரிந்த தங்கம் விலை… நகை வாங்கிட நல்ல தருணம் இதுதான்!