பிசிசிஐ தன்னுடைய வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து இரண்டு முக்கிய வீரர்களை கழட்டி விட்டுள்ளது.
2023-2024-ம் ஆண்டிற்கான வருடாந்திர ஒப்பந்தத்தினை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. நான்கு பிரிவுகளின் கீழ் இதில் வீரர்கள் வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.
அதன்படி ஏ+ பிரிவில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரிட் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகிய நான்கு வீரர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். இவர்களுக்கு ரூபாய் 7 கோடி சம்பளமாக வழங்கப்படும்.
இதேபோல ஏ பிரிவில் ரவிச்சந்திரன் அஸ்வின், முஹமது சமி, முஹமது சிராஜ், கே எல் ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா இடம்பெற்று உள்ளனர். இவர்களுக்கு சம்பளமாக ரூ.5 கோடி வழங்கப்படும்.
பி பிரிவில் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், யசஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பிடித்து இருக்கின்றனர். இவர்களுக்கு 3 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்படும்.
கடைசியாக சி பிரிவில் ரிங்கு சிங், திலக் வர்மா, ருத்துராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர், சிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே எஸ் பரத், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் மற்றும் ரஜத் படிதார் என எக்கச்சக்கமான இளம்வீரர்கள் இடம்பிடித்து உள்ளனர். இவர்களுக்கு சம்பளமாக ரூபாய் 1 கோடி வழங்கப்படும்.
இந்தநிலையில் ரஞ்சி கோப்பையில் விளையாடுமாறு அறிவுறுத்தியும் சொல்பேச்சு கேட்காமல் சுற்றித்திரிந்த ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோரை பிசிசிஐ தன்னுடைய வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து கழட்டி விட்டுள்ளது.
கடந்த ஆண்டுக்கான ஒப்பந்தத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் பி பிரிவிலும், இஷான் கிஷன் சி பிரிவிலும் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்கிறாரா செந்தில்பாலாஜி?
பா.ரஞ்சித்தின் ‘ஜெ பேபி’ ரிலீஸ் தேதி இதுதான்!