சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதி, இறுதிப் போட்டி எங்கே நடைபெறும்?

Published On:

| By Minnambalam Login1

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

பிசிசிஐ பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்து விட்டது. பாகிஸ்தான் எவ்வளவோ முரண்டுபிடித்தும், பிசிசிஐ மனம் மாறவில்லை.

கடைசியில் இப்போது ஹைப்ரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்த பாகிஸ்தான் ஒப்புக் கொண்டு விட்டது. அதன்படி, இந்தியா ஆடும் போட்டிகள் துபாயில் நடைபெறும்.

இந்தியா அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில் இந்த இரு ஆட்டங்களும் துபாயில்தான் நடைபெறும். இந்தியா அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு முன்னேறாத பட்சத்தில் அந்த ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெறும்.

சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி நடைறுகிறது. அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.ஒரு பிரிவில் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்கள் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இதற்காக, பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி எந்த பணரீதியலான இழப்பும் வழங்காது. மாறாக 2027 ஆம் ஆண்டு ஐசிசி நடத்தும் பெண்கள் தொடரை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது.

இந்தியாவும் பாகிஸ்தானும் சாம்பியன்ஸ் டிராபியில் ஒரே பிரிவில்தான் இடம் பெற்றுள்ளன.

இந்த இரு அணிகளும் மோதும் லீக் சுற்று ஆட்டம் லாகூரில் நடைபெறும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது.

தற்போது, இந்த போட்டியும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாத காரணத்தினால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கிட்டத்தட்ட ரூ.844 கோடி வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோகைப் அக்தர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

கொடுமையிலும் கொடுமை: மீட்புப்பணியில் விமானப்படை… கேரளாவிடம் 136 கோடி கேட்கும் மத்திய அரசு!

சாவர்க்கரை கேலி செய்கிறதா பாஜக? : மக்களவையில் ராகுல் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share