இந்திய அணியின் வீரர்கள் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும் என, பிசிசிஐ புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தற்போது இந்திய அணி இங்கிலாந்திற்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் தொடர்களில் விளையாட தயாராகி வருகிறது. இதற்கிடையில் ரஞ்சி தொடரும் ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய வீரர்கள் பலரும் தங்கள் மாநிலத்துக்காக ஆடி வருகின்றனர். ஆனால் பிசிசிஐ மற்றும் இந்திய தேர்வுக்குழுவால் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் ரஞ்சி தொடரில் இடம்பெறவில்லை. இது பிசிசிஐ-க்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஐபிஎல் தொடருக்கு முன்பாக வீரர்கள் ரஞ்சி தொடரில் விளையாட வேண்டும் என, மிகவும் ஸ்ட்ராங்காக மெசேஜ் அனுப்பி இருக்கிறதாம். தேசிய அணிக்கு விளையாடுபவர்கள் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ரஞ்சி தொடரில் விளையாட வேண்டும்.
தேசிய கிரிக்கெட் அகடாமியால் உடற்தகுதி இல்லாத வீரர்கள் என கூறப்பட்டவர்கள் மற்றும் அதில் சிகிச்சை மேற்கொண்டு சமீபத்தில் குணமடைந்தவர்களுக்கு மட்டுமே இதில் விலக்கு எனவும் தெரிவித்து இருக்கிறது.
குறிப்பாக இஷான் கிஷனுக்குத் தான் இந்த மெசேஜ் என கூறப்படுகிறது. அவர் ரஞ்சி தொடரில் விளையாடாமல் ஐபிஎல் தொடருக்காக ஹர்திக், குருணால் இருவருடனும் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, இந்த உத்தரவை பிசிசிஐ பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஞ்சி தொடர் தற்போது காலிறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதற்கு மேல் இஷான் தன்னுடைய மாநிலத்திற்காக ரஞ்சியில் ஆடுவாரா? இல்லை வழக்கம்போல இதையும் புறக்கணித்து தன்னுடைய எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி கொள்ளப்போகிறாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மூன்று நிமிட உரை… சட்டமன்றத்தில் இருந்து மீண்டும் ஆளுநர் வெளிநடப்பு!
ராஜேஷ் தாஸுக்கு சிறை தண்டனை: உறுதி செய்த நீதிமன்றம்!