BCCI nominated Mohammed Shami
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் முகமது ஷமி பெயரை அர்ஜுனா விருதுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த முகமது ஷமி கடந்த 2013ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் அசத்தி வரும் ஷமி இதுவரை மொத்தம் 448 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
தற்போதுள்ள கிரிக்கெட் அணியில் அனுபவம் வாய்ந்த வீரராக அறியப்படும் அவர் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பையிலும் மிகச்சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்தார்.
உலகக்கோப்பையில் அதிரடி!
உலகக்கோப்பையில் முதல் 4 லீக் ஆட்டங்களில் பெஞ்சில் அமர வைக்கப்பட்ட ஷமி, அடுத்து களம் கண்ட 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
மேலும் இந்திய அணி இறுதிப்போட்டியில் தோற்றாலும் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார்.
மேலும் ஒருநாள் உலகக்கோப்பையில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள ஷமி 45 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் ஜாகீர் கான் ஆகிய இந்திய ஜாம்பவான்களை முந்தியுள்ளார்.
இத்தைகைய சாதனைகளை கொண்டுள்ள முகமது ஷமியின் பெயரை இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த விளையாட்டு விருதான அர்ஜூனா விருதினை இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த கபில்தேவ், சச்சின் தோனி, ஷிகர் தவான், விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின், யுவராஜ் சிங் உள்ளிட்ட 57 வீரர்கள் பெற்றுள்ளனர்.
மற்ற வீரர்கள் யார் யார்?
இந்தாண்டுக்கான அர்ஜூனா விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் ஷமியை தவிர்த்து, இந்தியா ஆக்கி வீரர்கள் கிரிஷன் பகதூர் பதக் மற்றும் சுசீலா சானு, வில்வித்தை வீரர்கள் ஓஜஸ் பிரவின் தியோடலே மற்றும் அதிதி கோபிசந்த் சுவாமி ஆகியோரும் உள்ளனர்.
மேலும் குத்துச்சண்டை வீரர் முகமது ஹுசாமுதீன், செஸ் வீராங்கனை ஆர் வைஷாலி, கோல்ப் வீராங்கனை தீக்ஷா தாகர், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், மல்யுத்த வீராங்கனை ஆன்டிம் பங்கல், ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வுஷூ வீராங்கனை நௌரம் ரோஷிபினா தேவி, துடுப்பாட்ட வீராங்கனை அய்ஹிகா முகர்ஜி ஆகியோரின் பெயரும் பரிந்துரை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஜிகர்தண்டா XX பட குழுவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த கிளிண்ட் ஈஸ்ட்வுட்!
தென்காசியில் கிராஃபைட்: ஏல அறிவிப்பு விட்ட ஒன்றிய அரசு… போராட்ட அறிவிப்பு விட்ட துரை வைகோ
BCCI nominated Mohammed Shami