அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆட பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்பமாட்டோம் என்பதில் பிசிசிஐ உறுதியாக இருக்கிறது.
‘நாங்கள் மட்டும் இந்தியாவுக்கு வந்து விளையாடலாம், இந்தியா பாகிஸ்தானுக்கு வராதா?’ என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டும் இந்தியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் இந்தியாவுக்கு எதிராக பேசி வருகின்றனர்.
இதற்கிடையே, நேற்று நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐ.சி.சியின் முக்கிய உறுப்பு நாடுகளும் அசோசியேட் நாடுகளும் கலந்துகொண்டிருக்கின்றன. சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதில் நீடிக்கும் குழப்பங்களைப் பற்றி ஐ.சி.சி சார்பில் விவாதிக்கப்பட்டது.
அப்போது, பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு என இருதரப்பிலும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்திருக்கின்றனர். அதாவது, பிசிசிஐ சார்பில் இந்தியா ஆடும் ஆட்டங்களை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வேண்டும் என ஹைப்ரிட் மாடலை முன் வைத்துள்ளது.
அதுபோக, பாகிஸ்தானுக்கு இந்திய அணி பயணிப்பதை இந்திய அரசு விரும்பவில்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணிக்காது என்று உறுதியாக தெரிவித்து விட்டது.
அதே வேளையில், பாகிஸ்தானோ, சாம்பியன்ஸ் டிராபி முழுமையாக பாகிஸ்தானில் மட்டுமே நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. ஆனால், பாகிஸ்தானை தவிர அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளுமே இந்தியா கூறியுள்ள ஹைப்ரிட் மாடலுக்கு ஒத்துக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நிர்வாகிகள் தாங்கள் மீண்டும் ஆலோசித்துவிட்டு முடிவெடுப்பதாக கூறியுள்ளனர்.
பாகிஸ்தான் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும்பட்சத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றிவிடும் முடிவிலும் ஐ.சி.சி இருக்கிறது.
அப்படி நடக்கும்பட்சத்தில் பாகிஸ்தான் இந்தத் தொடரை புறக்கணிக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதோடு, வருங்காலத்தில் இந்தியாவுக்கு வந்து பாகிஸ்தான் அணி விளையாடாது என்றும் கூறப்படுகிறது. அப்படி நடந்தால் பிசிசிஐக்கும் அது வருமான இழப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
குமரேசன்
செய்திகளைஉடனுக்குடன்பெறமின்னம்பலம்வாட்ஸப்சேனலில்இணையுங்கள்….
“ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார்” – ஸ்டாலின் பேட்டி!
ஃபெஞ்சல் புயல்… வானில் வட்டமடித்த விமானங்கள்!
нажмите https://kazlenta.kz/koronavirus
you could check here https://web-counterparty.io/
my response https://brd-wallet.io/