டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் தேர்வுக்குழு உறுப்பினர்களை பிசிசிஐ நேற்று (நவம்பர் 18) நீக்கம் செய்துள்ளது.
சேத்தன் சர்மா தலைமையிலான சீனியர் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவை பிசிசிஐ நீக்கம் செய்துள்ளது.
மேலும், இந்த குழுவில் இடம்பெற்றுள்ள சுனில் ஜோஷி, ஹர்விந்தர் சிங், தேபாஷிஷ் மோகண்டி ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.
டி20 உலக கோப்பையில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் அரையிறுதிப் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்திய அணி வீரர்களை முறையாக தேர்வு செய்யாதது அணியின் தோல்விக்கு காரணம் என விமர்சனங்கள் எழுந்தது.
அப்போது, இந்திய அணி தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா பும்ரா முழுமையாக குணமடையாத நிலையில் அவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் விளையாட வைத்தது தவறு என்று தெரிவித்திருந்தார்.
மேலும், பிரித்வி ஷா போன்ற வீரர்களை அணியில் சேர்க்காததாலும், கே.எல் ராகுல் போன்ற வீரர்களுக்கு அணியில் தொடந்து வாய்ப்பு வழங்கி வந்தததும், சர்ச்சைக்குள்ளானது.
முன்னதாக, பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி சேத்தன் சர்மா மீதான விமர்சனங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால், புதிதாக பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுள்ள ரோஜர் பின்னி சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவை முழுமையாக நீக்கியுள்ளார்.
மேலும், புதிய தேர்வு குழு உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளும் தொடங்கி உள்ளது. 7 டெஸ்ட் போட்டிகள், 30 முதல் தர போட்டிகள், 10 சர்வதேச போட்டிகள் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள் இந்த பதவிக்கு போட்டியிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 28 மாலை 6 மணியுடன் விண்ணப்ப தேதி முடிவடைகிறது.
செல்வம்
வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!