சச்சினைத் தொடர்ந்து தோனிக்கு பெருமை செய்த பிசிசிஐ : ரசிகர்கள் ஹேப்பி!
BCCI honoured Dhoni after Sachin
இந்தியாவின் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக அறியப்படுபவர் தோனி. ராஞ்சியில் இருந்து வந்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தனது கூல் கேப்டன்சி மற்றும் அதிரடி பேட்டிங்கால் கட்டிப்போட்டவர்.
மேலும் இந்தியாவிற்கு அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமையும் தோனியின் வசமே உள்ளது.
சமீபத்தில் ’7ஆம் எண்ணின் சிறப்பு என்ன?’ என்ற கேள்விக்கு… கூகுளில் தோனியின் சாதனைகள் அடங்கிய தரவுகள் கொட்டின. இதனை குறிப்பிட்டு Thala For A Reason என்று தோனிக்கு பாராட்டு தெரிவித்தது.
தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் தங்களது பிராண்டை குறிப்பிட்டு ’Thala For A Reason’ ஹேஷ்டேகை டிரெண்ட் செய்தனர்.
இந்த நிலையில் தற்போது தோனியின் 7ம் எண் ஜெர்சிக்கு ஓய்வு அளித்து கெளரவிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக இந்திய ஜாம்பவான் சச்சின் அணிந்திருந்த 10ம் எண் ஜெர்சிக்கு பிசிசிஐ ஓய்வு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெர்சிக்கு ஓய்வு?
அதாவது குறிப்பிட்ட வீரர் அணிந்திருந்த ஜெர்சி எண்ணுக்கு ஓய்வு அளிக்கும் பட்சத்தில் அந்த எண் கொண்ட ஜெர்சியை மற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாரும் எதிர்காலத்தில் பயன்படுத்த அனுமதி கிடையாது.
7ம் எண் ஜெர்சியை எடுக்க வேண்டாம் – பிசிசிஐ!
இதுகுறித்து பிசிசிஐ-யை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில்,
“இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனியின் பங்களிப்பிற்காக 7ஆம் எண் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.
இதனால் இளம் வீரர்கள் மற்றும் தற்போதைய இந்திய அணி வீரர்கள் யாரும் எம்.எஸ். தோனியின் 7ம் எண் ஜெர்சியை எடுக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சச்சின் அணிந்திருந்த 10ஆம் எண் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து வீரர்கள் பெறும் ஜெர்சி எண் பட்டியலில் இருந்து நம்பர் ’10’ நீக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நான்கு சமூதாயத்தை சேர்ந்த ஐந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… தமிழ் ஆசிரியர் கைது!
தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
BCCI honoured Dhoni after Sachin