இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வு குழுத் தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) தேர்வு குழுத் தலைவராக சேத்தன் சர்மா இருந்தார். இவர் சமீபத்தில் ரகசிய பேட்டி ஒன்றில் இந்திய வீரர்கள் குறித்து பேசியிருந்தார்.
இந்திய அணியில் விராட் கோலியின் கேப்டன்சி பறிக்கப்பட்டது குறித்தும் கோலிக்கும் கங்குலிக்கும் இடையில் இருக்கும் வெறுப்பு குறித்தும் அந்த பேட்டியில் பேசியிருந்தார்.
மேலும் இந்திய வீரர்கள் 80-ல் இருந்து 85 சதவீதம் உடற்தகுதியோடு இருந்தாலும் ஊக்கமருந்து பயன்படுத்துவதாகவும் பேசியிருந்தார்.

மேலும், வீரர்கள் வளர்ச்சியடையும் போது அவர்கள் கிரிக்கெட் வாரியத்தை விட தாங்கள் தான் பெரியவர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
அவர்களை கிரிக்கெட் வாரியத்தால் தொட முடியாது என்று நினைக்கின்றனர்.
அந்த பேட்டி வீடியோவில் ரோகித் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா குறித்தும் மற்ற வீரர்கள் குறித்தும் பேசியிருந்தது, இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதோடு கடும் எதிர்ப்புகளையும் பெற்றது.
பிசிசிஐ, சேத்தன் சர்மா அளவிற்கு அதிகமாகப் பேசி வருவதாகக் கூறி அவருடைய கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் பதவியை சேத்தன் சர்மா ராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் வழங்கினார். அவருடைய ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ உடனடியாக ஏற்றுக் கொண்டுள்ளது.
மோனிஷா
ட்விட்டர் இந்தியா நிறுவனங்களை மூடிய எலான் மஸ்க்: ஊழியர்கள் அதிர்ச்சி!
வெளியூர் பேருந்துகள் தாம்பரம் வழியாக கோயம்பேடு வர உத்தரவு!