மகளிர் ஆசிய கோப்பை 2024: ஹர்மன்ப்ரீத் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!

மகளிருக்கான 2024 ஆசிய கோப்பை போட்டிகள் வரும் ஜூலை 19 அன்று துவங்கவுள்ளது.

இலங்கையில் நடைபெறவுள்ள இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, தாய்லாந்து என 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில், இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இலங்கை, மலேசியா, தாய்லாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இந்த அணிகளுக்கு இடையே லீக் சுற்று ஆட்டங்கள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

அனைத்து போட்டிகளிலும் இலங்கையின் டம்புல்லாவில் உள்ள ரங்கிரி டம்புல்லா சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 26 அன்றும், இறுதிப்போட்டி ஜூலை 28 அன்றும் நடத்தப்பட உள்ளன.

இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த அணியில், ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, பூஜா வஸ்திரகர், ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவ் உள்ளிட்ட பல முன்னணி வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பர்களாக ரிச்சா கோஷ், உமா சேத்ரி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஷ்ரேயன்கா படேல், சஜனா சஜீவன் உள்ளிட்டோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய மகளிர் அணி:

ஹர்மன்ப்ரீத் கவுர் (c), ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (wk), உமா சேத்ரி (wk), பூஜா வஸ்திரகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாகூர், தயாளன் ஹேமலதா, ஆஷா ஷோபனா, ராதா யாதவ், ஷ்ரேயன்கா படேல், சஜனா சஜீவன்,

மேலும், ஸ்வேதா ஷெராவத், சைகா இஷக், தனுஜா கன்வர், மேக்னா சிங் ஆகிய 4 வீராங்கனைகள் ரிசர்வ் வீராங்கனைகளாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி தனது முதல் லீக் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை ஜூலை 19 அன்று எதிர்கொள்கிறது. அதை தொடர்ந்து, ஜூலை 21 அன்று ஐக்கிய அரபு அமீரகம், ஜூலை 23 அன்று நேபாளம் ஆகிய அணிகளுடன் மோதவுள்ளது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிராபெனின்-என்னும் நானோ மெட்டீரியல்

காளிதாஸ் 2… படப்பிடிப்பை தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்

புதிய தனியார் முதலீட்டுத் திட்டங்களின் மதிப்பு 92% சரிந்தன

பிரதமரின் மாஸ்கோ பயணம்!

Women's Asia Cup 2024

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts