BANvsNZ fan showcase the palestine support poster

சேப்பாக்கம் மைதானத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு போஸ்டர்!

விளையாட்டு

நியூசிலாந்து – வங்கதேசம் இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டிக்கு இடையே சேப்பாக்கம் மைதானத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு போஸ்டரை ஏந்திய இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நியூசிலாந்து – வங்கதேசம் இடையே உலகக்கோப்பை லீக் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்துள்ளது.

சச்சின் – சேவாக் சாதனை முறியடிப்பு!

வங்கதேசத்தின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் 5ஆவது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் ஷாகிப் அல் ஹசன்(40) மற்றும் முஸ்பிகுர் ரஹிம்(66) ஜோடி 96 ரன்கள் குவித்து அணியை சரிவில் இருந்த மீட்டனர்.

மேலும் 19 இன்னிங்ஸ்களில் ஒன்றாக விளையாடி 972 ரன்கள் குவித்துள்ள முஸ்பிகுர் ரஹிம் மற்றும் ஷாகிப் அல்ஹசன் ஜோடி, சச்சின் சேவாக் பார்டனர்ஷிப் ( 20 இன்னிங்ஸ் 971 ரன்கள்) ரெக்கார்டை முறியடித்துள்ளனர்.

தொடர்ந்து கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய முகதுல்லாவின் உதவியால் 50 ஓவர் முடிவில்  வங்கதேச அணி 245 ரன்கள் குவித்துள்ளது.

தொடர்ந்து விளையாடி வ்ரும் நியூசிலாந்து அணி 21 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 100 ரன்கள் குவித்து தொடர்ந்து விளையாடி வருகிறது.

பாலஸ்தீன ஆதரவு போஸ்டர்!

இதற்கிடையே போட்டியின் நடுவில் மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர்  திடீரென ‘Free Palestine’ என எழுதப்பட்ட போஸ்டரை காட்டி பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

அவரை உடனடியாக பிடித்த போலீசார், அவரிடமிருந்த போஸ்டரை கைப்பற்றினர். அவரையும்,  அவருடன் வந்த மற்றொரு நபரையும் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாலஸ்தீனுக்கு ஆதரவாக பதாகை காட்டிய இளைஞர் வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது ஹசன் என்பதும்,

குடும்ப உறுப்பினரின்  மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த முகமது ஹசன் தனது நண்பர் ஹியாகத் அலியுடன் சேப்பாக்கில் இன்று நடைபெற்று வரும்  வங்கதேசம் – நியூசிலாந்து போட்டியை பார்க்க வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

லியோ சிறப்புக்காட்சி ரத்து: ரஜினி வருத்தம்… அரசாணை திருத்தம்!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால்… புதிய குடும்ப அட்டைகள் வழங்குவது தாமதமா?

’இன்னொரு பாலச்சந்தர்’: சித்தா படக்குழுவுக்கு திருச்சி சிவா பாராட்டு!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0