வங்கதேச சுற்றுப்பயணம்: மீண்டும் ரவீந்திர ஜடேஜா விலகல்!

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா மீண்டும் விலகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கான ஒருநாள் போட்டி வரும் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதைத் தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் வங்காளதேச அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடந்த மாதம் அறிவித்தது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, யாஷ் தயாள் உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த சூழலில் ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஜடேஜா மற்றும் யாஷ் தயாள் விலகியுள்ளனர். அதே நேரத்தில், டெஸ்ட் தொடரில் ஜடேஜா இடம்பிடித்துள்ளார்.
அவர்களுக்கு பதிலாக குல்தீப் சென் மற்றும் ஆல்-ரவுண்டர் ஷபாஸ் அகமது ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்திய அணியில், ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, அக்சர் படேல் , வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது. ஷமி, முகமது. சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், கே.எஸ். பாரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ். , ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்று உள்ள்னர்.

ஜெ.பிரகாஷ்

கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா: தயாராகும் ஏற்பாடுகள்!

குட்கா வழக்கு: சி.விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.