bangaladesh shakib al hasan slaps fan

Video: திடீரென கன்னத்தில் விழுந்த அறை… ஜெயிச்சிட்டா உங்களுக்கு கண்ணு தெரியாதே!

விளையாட்டு

தன்னுடைய கட்டுப்பாட்டினை மீறி ரசிகர் ஒருவரை கேப்டன் அடித்த வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வங்கதேசம் அணியின் கேப்டன் ஷாஹிப் அல் ஹசன், அண்மையில் வங்கதேசத்தின் ஆளுங்கட்சி சார்பில் எம்.பி தேர்தலில் போட்டியிட்டு சுமார் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

இதையடுத்து தேர்தலில் வென்ற ஷாகிப் அல் ஹசனை சுற்றி வளைத்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துகளைக் கூற முண்டியடித்தனர்.

அப்போது கட்டுப்படுத்த முடியாத கூட்டத்தால் ரசிகர்கள் எல்லைமீற, கோபம் தலைக்கேறிய ஷாகிப் ரசிகர் ஒருவரின் கன்னத்தில் பளாரென அறைந்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ”இவரால் கோபம் என்பதை கட்டுப்படுத்தவே முடியாதா?” என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக உள்ளூர் விளையாட்டுத் தொடரில் எல்பிடபிள்யூ கேட்டு அவுட் கொடுக்காததால் ஸ்டெம்பை பிடுங்கி எறிந்து, நடுவரையும் தரக்குறைவாக ஷாகிப் விமர்சித்து இருந்தார்.

இதேபோல கடந்த உலகக்கோப்பை தொடரின் போது இலங்கை வீரர் மேத்யூஸ் காலதாமதம் செய்வதாகக் கூறி, ஷாகிப் அவரை விளையாட விடாமலே மைதானத்தை விட்டு வெளியே அனுப்பியது மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்தது.

அதோடு ரசிகர் ஒருவரை பேட்டை வைத்து மிரட்டியது என பல்வேறு விமர்சனங்கள் அவர்மீது இருக்கின்றன. இந்த லிஸ்டில் ரசிகரை அறைந்த சம்பவமும் தற்போது இணைந்துள்ளது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

அமைச்சர்கள் மீதான சூமோட்டோ வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முக்கிய அறிவிப்பு!

நயன்தாரா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0