2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 11வது லீக் போட்டியில், நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. காயம் காரணமாக 9 மாதங்கள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றிருந்த கேன் வில்லியம்சன், இந்த போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பினார்.
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 245 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
246 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு 3வது வீரராக களமிறங்கிய கேன் வில்லியம்சன், சிறப்பாக விளையாடி காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பிய முதல் போட்டியிலேயே அரைசதம் கடந்து அசத்தினார்.
இதன்மூலம், நியூசிலாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் அதிக அரைசதங்கள் கடந்த வீரர்கள் பட்டியலில், கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில், இவர் இதுவரை 134 அரைசதங்களை குவித்துள்ளார். முன்னதாக, 133 அரைசதங்களுடன் ராஸ் டெய்லர் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.
இதன் பின்னும், தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த கேன் வில்லியம்சன், சீரான வேகத்தில் அணிக்கு ரன்களை சேர்த்து வந்தார்.
இந்நிலையில், ஆட்டத்தின் 39வது ஓவரில் ரன் ஓட முயன்றபோது, ஸ்டம்பை நோக்கி வீசப்பட்ட பந்து எதிர்பாராத விதமாக கேன் வில்லியம்சனின் இடது கை கட்டை விரலில் பட்டது.
இதை தொடர்ந்து, அவரை பரிசோதித்த நிபுணர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை மைதானத்தை விட்டு வெளியே அழைத்து சென்றனர். இந்த போட்டியில் 78 ரன்களுடன் கேன் வில்லியம்சன் ஒய்வு பெற்றார்.
இந்நிலையில், அவரின் காயம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை பகிர்ந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், கேன் வில்லியம்சனுக்கு இடது கை கட்டை விரலில் X-ray எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
Kane Williamson will have an X-ray on his left thumb tomorrow after being hit by the ball while running between the wickets in tonight's match against Bangladesh. #CWC23 pic.twitter.com/6a8BElmw2e
— BLACKCAPS (@BLACKCAPS) October 13, 2023
போட்டிக்கு பிறகு, தனது காயம் குறித்து பேசிய கேன் வில்லியம்சன்,
“விரல் வீக்கமடைந்து, உடனடியாக சிவந்துவிட்டது. அதனால், ஸ்கேன் எடுக்க வேண்டியுள்ளது. ஆனால், பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது என நம்புகிறேன்”, என தெரிவித்துள்ளார்.
காயங்களில் இருந்து அணிக்கு திரும்பிய முதல் போட்டியிலேயே, கேன் வில்லியம்சன் மீண்டும் ஒரு காயத்துக்கு உள்ளாகியுள்ள சம்பவம் அவரது ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முரளி
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
சென்னை வந்த சோனியா காந்தி: ஸ்டாலின் வரவேற்றார்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
பாக். போட்டியில் சுப்மன் கில் விளையாடுவாரா?: ரோகித் சர்மா பதில்!