பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீரர் அர்ஸ்தீப் சிங் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்து அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பரம வைரிகளான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று (அக்டோபர் 23) மோதி வருகின்றன.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
முதல் ஓவரை புவேன்ஷ்குமார் வீச அந்த ஓவரில் ஸ்டிரைக்கில் இருந்த ரிஸ்வான் ஒரு ரன்கள் கூட அடிக்கவில்லை.
இதற்கிடையே 2வது ஓவரை இந்தியாவின் இளம்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் வீச கேப்டன் ரோகித் பணித்தார்.
அதற்கு கைமேல் பலனாக அர்ஸ்தீப்பின் முதல்பந்திலேயே அபாயகரமான பேட்ஸ்மேன் பாபர் அசாம் டக் அவுட் ஆனார்.
மேலும் அதே ஓவரிலேயே அடுத்து இறங்கிய மசூத் ரன் அவுட் கண்டத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
பின்னர் தனது 2வது ஒவரை வீச வந்த அர்ஸ்தீப், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் (4) விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனால் முதல் 5 ஓவரில் 24 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
அதே வேளையில் மசூத் மற்றும் இப்திகார் ஆகியோர் பாகிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
நிதனாமாகவும் அதே நேரத்தில் தேவையான பந்துகளை இருவரும் பவுண்டரிக்கும் விரட்டி வருகின்றனர்.
தற்போது பாகிஸ்தான் அணி 10 ஓவர் முடிவில் 60 ரன்கள் குவித்து ஆடி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
கோவை கார் விபத்து சதியா ? – டிஜிபி பதில்!