என் வெற்றிக்கு காரணம் இது தான் : அக்சர் படேல் சொன்ன சீக்ரெட்!

விளையாட்டு

இந்திய அணியில் நான் விளையாடும் போது கேப்டன்கள் எனக்கு கொடுக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும் என்னை சிறப்பாக செயல்பட வைக்கிறது என டி 20 தொடரில் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்ட அக்சர் படேல் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி முடித்துள்ளது.

இந்த டி 20 தொடரை இந்திய அணி (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

மேலும் இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (ஜனவரி 10 ) துவங்க உள்ளது.

இந்நிலையில், இந்த டி20 தொடரின் மூன்றாவது ஆட்டம் ராஜ்கோட் மைதானத்தில் நேற்று முன் தினம் (ஜனவரி 7 ) நடைபெற்று முடிந்த வேளையில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியானது அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவும், தொடர் நாயகனாக சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேலும் தேர்வு செய்யப்பட்டனர்.

ஜடேஜா விற்கு பதிலாக இந்திய அணியில் இடம் பிடித்து வரும் அக்சர் பட்டேல் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடிய வருவதால் ஜடேஜா வின் இடத்தை எதிர்காலத்தில் இவரே பூர்த்தி செய்வார் என்று பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தொடரில் தான் விளையாடிய விதம் குறித்து அக்சர் பட்டேல் பேசியுள்ளார் அதில் “ இந்த வெற்றியில் எனது பங்களிப்பும் இருப்பதில் மகிழ்ச்சி.

நான் பவுலிங்கை விட பேட்டிங்கில் மிகச் சிறப்பாக விளையாடி வருவது அணிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என்று நினைக்கிறேன்.

அதே போன்று பந்துவீச்சிலும் நான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்.

நான் ஒரு சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்பதனால் பந்து வீச்சையும் தாண்டி பேட்டிங்கில் எனது பங்களிப்பை வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சி.

இந்திய அணியில் நான் விளையாடும் போது கேப்டன்கள் எனக்கு கொடுக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும் என்னை சிறப்பாக செயல்பட வைக்கிறது.

அந்த வகையில் இந்த தொடரிலும் என்னை அணியின் நிர்வாகமும், கேப்டனும் ஆதரித்ததனால் என்னுடைய திட்டம் போட்டியின் போது தெளிவாக இருந்தது மட்டுமின்றி நான் சுதந்திரமாகவும் விளையாடுவதால் என்னால் சிறப்பாக செயல்பட முடிகிறது” என்று கூறியுள்ளார்.

மு. வா. ஜெகதீஸ் குமார்

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

திராவிட இந்தியா: சேஷைய்யங்கார் சொல்வதையாவது கேட்பாரா ஆளுநர்?

தமிழக பூர்வீகம்: 100 நாட்களை கடந்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *