கே.எல்.ராகுலை தொடர்ந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேலும், தன் நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னதாக நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் அபாரமாக வென்று இந்திய அணி கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இன்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்களும் தங்களது திருமண வாழ்க்கையை இனிதே தொடங்கியுள்ளனர்.
சமீபத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான கே.எல்.ராகுல், தனது காதலியும், நடிகையுமான அதியா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆவார்.
கே.எல்.ராகுல் திருமணத்தை தொடர்ந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேலும், தன் நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துள்ளார்.

அக்சர் பட்டேல் மற்றும் அவரது காதலி மேகா பட்டேலின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இவர்களது திருமணம் நேற்று இரவு குஜராத் மாநிலம் வதோராவில் விமரிசையாக நடந்துள்ளது.
இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்கள் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.

நியூசிலாந்து அணியுடனான டி20 தொடர் காரணமாக இந்திய அணி வீரர்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அதேவேளையில் முன்னாள் வீரர் கைப் மற்றும் ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் திருமணத்தில் பங்கேற்று அக்சருக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.
இதற்கிடையே திருமண நிகழ்ச்சியின் போது அக்சர் பட்டேலுடன் இணைந்து நடனம் ஆடிய வீடியோவை மேகா பட்டேல் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்த நிலையில் வைரலாகி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
எல்.ஜி.எம் : சினிமாவிலும் சிக்ஸர் அடிப்பாரா தோனி?
“ஹே பாய்காட் வெறியர்களே” : பதான் குறித்து பிரகாஷ் ராஜ்