AUSvsAFG : ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றி… வேட்டு வைத்த ஆப்கானிஸ்தான்!

Published On:

| By christopher

AUSvsAFG : Afghanistan put red card to Australia's continious win!

‘சூப்பர் 8’ குரூப் 1 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கான சூப்பர் 8 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

அதன்படி குரூப் 1-ல் இடம்பிடித்துள்ள ஆப்கானிஸ்தான் அணி வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் மேற்கு இந்தியத் தீவுகளின் கிங்ஸ்டவுனில் இன்று (ஜூன் 23) காலை நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற  ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

T20 WC: Gurbaz, Zadran script history with third century stand

அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தனர். அதிரடியாக ஆடி வந்த குர்பாஸ் 60 ரன்களிலும், ஸ்த்ரான் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பெரிய ஸ்கோர் குவிக்கும் என்று அந்த அணி எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்து வந்த ரஷித், கரீம் ஜனத், குல்புதீன் நைப் ஆகியோரை ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சொற்ப ரன்களில் வெளியேற்றினார்.

இதனால் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு, முதல் ஓவரை வீசிய நவீன் உல் ஹக், அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட்டை கிளீன் போல்ட்  ஆக்கி அதிர்ச்சி கொடுத்தார்.

மூன்றாவது ஓவரில் ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷை 12 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார் நவீன்.

ஐந்தாவது ஓவரில் வார்னரை 3 ரன்களில் அவுட் ஆக்கினார் நபி. இதனால் ஆஸ்திரேலியா அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Afghanistan secure historic win against Australia...

அதன்பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வேல் மட்டும் ஒரு பக்கம் நின்று போராட, மறுபக்கம் வந்த வேகத்தில் ஒற்றை இலக்க ரன்னில் மற்ற வீரர்கள் பெவிலியன் நோக்கி திரும்பினர்.

இதனால் ஆஸ்திரேலியா 19.2 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அதாவது சர்வதேச டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வி கண்ட ஆப்கானிஸ்தான் அணி முதன்முறையாக வெற்றியை ருசித்துள்ளது.

மேலும் கடந்த டி20 உலகக்கோப்பை தொடர்களில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தோல்வியை சந்திக்காமல் வெற்றிநடை போட்டு வந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முட்டுக்கட்டை போட்டுள்ளது ஆப்கானிஸ்தான்.

Gurbaz, Zadran fire as Afghanistan shock Australia in World Cup - Sports Aaj English TV

இதுகுறித்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்ற குலாப்தீன் பேசுகையில், “ஒரு வழியாக ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திவிட்டோம். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனை. எங்கள் அணிக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய வரலாறுகள் இல்லை. அதனால், இதை மிக முக்கிய தருணமாக பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 போலவே குரூப் 2-விலும் அரையிறுதிக்கு செல்ல மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சின்ன சின்ன கண்கள் : யுவனின் எமோசனல் பதிவு… பிரபலங்கள் ஆறுதல்!

கள்ளக்குறிச்சி : பலி எண்ணிக்கை 57ஆக உயர்வு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share