சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் இன்று (பிப்ரவரி 4) இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான முதல் அரையிறுதி ஆட்டம் தொடங்கியது.இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இந்த போட்டியில் இந்திய அணி 65.5 சதவிகிதம் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கணித்துள்ளனர்.australia won toss
கடைசியாக விளையாடிய 13 போட்டிகளில் தொடர்ச்சியாக இந்தியா டாஸில் தோற்றுள்ளது. இதில், 10 முறை ரோகித் கேப்டனாக இருந்துள்ளார். 3 முறை கே.எல். ராகுல் கேப்டன். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 3 போட்டிகளிலும் டாஸில் தோற்றாலும் 3 ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றது. சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசம், பாகிஸ்தான்,நியூசிலாந்து அணிகளுக்கு எதிராகவும் இந்தியா டாஸில் தோற்றது, ஆனால், களத்தில் வெற்றி பெற்றது.australia won toss
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ட்ராவிஸ் ஹெட் மற்றும் கூப்பர் கனோலி ஆகியோர் களம் இறங்கினர். ஆஸ்திரேலியா 4 ரன்கள் எடுத்திருந்த போது,கனோலி 9 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஷமி பந்தில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் பிடி கொடுத்து அவுட் ஆனார். அடுத்து கேப்டன் ஸ்மித் ட்ராவிசுடன் ஜோடி சேர்ந்தார். ட்ராவிஸ் 38 ரன்களிலும் லபுசானே 29 ரன்களில் இன்க்லீஸ் 11 ரன்களிலும் ஆட்டம் இழந்தாலும் ஸ்மித் மட்டும் நங்கூரம் போல நின்று ஆடினார். ஸ்மித்துக்கு கேரி பக்கபலமாக இருந்தார். இதனால், ஆஸ்திரேலிய அணியின் ரன்னும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. ஆஸ்திரேலிய அணி 37வது ஓவரில் 200 ரன்களை கடந்தது.
ஆஸ்திரேலியா 300 ரன்களை எளிதாக கடந்து விடுமென்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மளமளவென விக்கெட்டுகள் விழுந்தது. ஸ்மித் 79 ரன்களில் அவுட் ஆனதையடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 264 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வருண் சக்கரவர்த்தி , ஜடேஜா தலா இரு விக்கெட்டுகளையும் பாண்ட்யா, அக்ஷார் படேல் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.