ICC worldCup: நெதர்லாந்து அணியை 309 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பை வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்து ஆஸ்திரேலியா அணி சாதனை படைத்துள்ளது.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 24வது லீக்போட்டி ஆஸ்திரேலியா – நெதர்லாந்து அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று(அக்டோபர் 25) நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட் செய்த நிலையில், நெதர்லாந்து பந்துவீச்சை மைதானத்தின் நாலாப்புறமும் பறக்கவிட்டு 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் எடுத்தது.
வார்னர் – மேக்ஸ்வெல் அபார சதம்!
அதிகபட்சமாக தொடக்க வீரரான வார்னர் 93 பந்துகளில் 3 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் ஒருநாள் போட்டியில் தனது 22வது சதம் (104 ரன்கள்) அடித்து எடுத்து ஆட்டமிழந்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
Pushpa celebration by David Warner after completing his century.#AUSvsNED #AUSvNED #CWC23#CWC23INDIA #DavidWarner pic.twitter.com/M665ciZfEB
— Ahtasham Riaz 🇵🇰 (@AhtashamRiaz_) October 25, 2023
அதேபோல் 40வது ஓவரில் களமிறங்கிய மேக்ஸ்வெல் வெறும் 40 பந்துகளில் 8 சிக்ஸர், 9 பவுண்டரி என சதம்(106) அடித்து அசத்தினார். இதன்மூலம் உலகக்கோப்பை போட்டிகளில் அதிவேக சதமடித்த வீரர் என்ற அரிய சாதனையை படைத்தார் மேக்ஸ்வெல்.
மிகப்பெரும் சாதனை!
இதனையடுத்து 400 ரன் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய நெதர்லாந்து அணி வெறும் 90 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி சுருண்டது.
பேட்டிங்கை தொடர்ந்து பந்துவீச்சிலும் மிரள வைத்த ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய ரன்கள் (309) வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
அதே நேரத்தில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் குறைந்த ரன்களுக்கு(90) ஆல் அவுட் ஆன அணி என்ற மோசமான சாதனையை நெதர்லாந்து அணி பெற்றது.
ஆஸ்திரேலியா அணி தரப்பில் 3 ஓவர்களை வீசி 8 ரன்களை மட்டுமே கொடுத்த ஆடம் சம்பா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
வரலாற்றை திருப்பும் ஆஸ்திரேலியா?
1999ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் முதல் இரண்டு போட்டியில் தோற்ற ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்த போட்டிகளில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.
அதே போன்று நடப்பு தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணியிடம் படுதோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது ஆஸ்திரேலியா அணி.
அதனால் அந்த அணி இந்த முறை அரையிறுதி கூட செல்லாது என்று பலரும் ஆருடம் கூறினர்.
இந்த நிலையில், தனது அடுத்தடுத்த போட்டிகளில் பாகிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் தங்கள் மீதான விமர்சனங்களுக்கு நெத்தியடியாக பதிலடி கொடுத்துள்ளது ஆஸ்திரேலியா.
கிறிஸ்டோபர் ஜெமா
பியூட்டி டிப்ஸ்: முடி உதிர்வு – எது நார்மல்… எது அப்நார்மல்?